பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵3 இந்த ஹிந்துக்கள் நாகரீகத்திலும், அறிவிலும் இவ்வளவு மேம்பட்டவர்களா?' என்று வியப்பெய்தினர். தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக் கிருர்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின் மூல மாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்ட வர்களால் நமது தேசத்துக் கல்விப் பெருமையால் இந்தியா வின் உண்மையான மாட்சியை அறியாது நின்ற இங்கிலீஷ் படிப்பாளிகளாகிய நம்மவரில் பலரும் வெளி நாட்டாரின் எண்ணத்தையே உண்மையெனக் கருதி மயங்கிவிட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால் இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படி இங்கிலீஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்து விட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும் மறந்துபோய் அதோகதியில் விழுந்துவிடுமோ என்று அஞ்சக்கூடிய நிலைமை அநேக மாய் ஏற்படலாயிற்று, இப்படிப்பட்டபயங்கரமான சமயத் தில் ஸ்வாமி விவேகானந்தர் முதலாயினேர் தம்முடைய ஞான பராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம் பண்ணி மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலீஷ் படித்த சுதேச துாஷணைக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரிகத்தில் நம்பிக்கை செலுத்துவராயினர். மேற்றிசையோர் எது சொன்னலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர், முன்பு இந்தியாவை அந்த அந்நியர் பழித்துக்கொண்டிருந்தபோது தாமும் பழித்தவாறே, இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கிய போது தாமும் சுதேசப் புகழ்ச்சி கூறலாயினர். விவே கானந்தர் முதலானவர்கள் ஐரோப்பிய அமெரிக்கர்களால் போற்றப் படுவதன் முன்பு அம் மஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில், அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணி வந்தனை வழிபாடுகள் t_fĦ',~~ă