பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 களில் நிகரற்ற தேர்ச்சி பெற முயலவேண்டும். இடை விடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கை யறிவை மிகவும் உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம். ஒளவையார் பிறந்து வாழ்ந்த தமிழ் நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா? சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின், தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்துவிடுவார் கள். அறிவு திறத்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதிஸாலபமாய் விடும். எனவே, பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள். தமிழ்ச் சகோதரி களே! அங்ங்ணம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடு களுக்குப் போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள். விடுதலைத் தெய்வம் உங்களைத் தழுவும் பொருட்டு இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு காத்து நிற்கிறது. தமிழ் மாதர்களே! மனம் சோர்ந்து விடாதீர் கள். உங்களுக்கு நல்ல காலம் வருகிறது! வந்துவிட்டது: நீங்கள் விடுதலை பெறுவீர்கள்; உங்களால் உலகம் மேன்மை யுறும். சகோதரிகளே! தமிழ் நாட்டின் நாகரீகம் மிகவும் புராதனமானது. ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்ன தன்மை யுடையதென்று கண்டுபிடிக்க வேண்டு மாயின், அதைக் கண்ணுடி போல விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம் அதாவது காவியம் முதலிய நூல்களேயாகும். இங்கி லாந்து தேசத்தின் தற்கால இலக்கிய நூல்களை வாசித்துப் பார்த்தோமாயின், அதன் தற்கால நாகரீகத்தை ஒரு வாறு அளவிடக் கூடும். எனவே, தமிழ் நாட்டின் புராதன நாகரீகத்தை அளவிட்டறிவதற்கு தமிழ் நூல் களே தக்க அளவுகோலாகின்றன. இந்தியாவில் பெரும்