பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஜனங்களைக் கடவுள் பேச்சில்லாமலா வைத்திருந்தார் ?" என்று கேட்பீர் களாயின், மற்றச் சொற்களும் பல இருக்கத்தான் செய்தன. ஆனல், மனித நாகரீகத்தில் முதல் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலேதான் உயர்ந்த கவிதையும், இலக்கியங்களும், சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்ற பாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்கும் பின்னே சமைந்தன. பல இடங்களில் இவை இயற்றின நடையையே முன் மாதிரியாகக் கொண்டன. அதாவது ஆரியரும் தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உயர்ந்த நாகரீகப் பதவி பெற்ற ஜாதியார். இங்ங்னம் முதல் முதலாக நாகரீகம் பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழைய நாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்ருல் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விசேஷமும் நலமும் பொருந்திய செய்திகளில் ஒன்ருகக் கணித்தற் குரியது. தமிழ் நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய ஸ்ஹோதரிகளே! இத்தனை பழமையும், மேன்மையும் சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேங்களிலுள்ள நாகரீ கத்தைக் காட்டிலுங்கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆர்யதிராவிட நாகரிகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது. இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்கும் கடமை உங்களைச் சேர்ந்தது. எங்ங்ணம் எனில், பொதுப்படையாக நோக்கு மிடத்தே மனித நாகரிகங்கள் ஆண்மக்களின் உதவி கொண்டே பிறப்பிக்கப்படுகின்றன. அப்பால் பெரும்பாலும் பெண்களாலேயே காக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் மகம்மதிய நாகரிகம் வந்து ஹிந்து தர்மத்தைத் தாக்கிற்று. ஆனல் ஹிந்து தர்மம் அதிலுள்ள