பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 முக்கிய அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, அந்தத் தாக்குதலால் அழிவெய்தாமல், முன்னைக் காட்டிலும் அதிக சக்தியுடன் மிஞ்சி நின்றது. ஸமீப காலத்தில் ஐரோப்பிய நாகரிகம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக் கிறது. இதுவும் நமது நாகரிகத்துடன் நன்ருகக் கலந்து விட்டது. இனி இதன் விளைவுகளை நம் நாட்டாரின் அறிவினின்று முற்றிலும் பிரித்துக் களைதல் ஸாத்யப் படாது. இது நம்முடைய தேச ஞானத்தின் மர்மங்களுக் குள்ளே கலந்து பெரும்பாலும் நமதாய் விட்டது...... ஸ்ஹோதரிகளே! நீங்கள் ஐரோப்பிய நாகரிகத்தின் சேர்க்கையைக் குறித்துச் சிறிதேனும் வருத்தப்பட வேண் டாம். அது நமது தேசத்துப் பயிற்சியை அழிக்கும் வலிமை உடையதன்று. அது நமக்குத் துணை. அது நாம் அஞ்சுதற் குரிய பிசாசன்று. வெவ்வேறு வகைப்பட்ட இரண்டு நாகரி கங்கள் வந்து கூடும்போது அவற்றுள் ஒன்று மிகவும் வலி யதாகவும், மற்ருென்று மிகவும் பலவீனமாகவும் இருக்கு மாயின் வலியது வலிமையற்றதை இருந்த இடம் தெரியா மல் விழுங்கிவிடும். வலிமையற்ற நாகரிகத்திற்குரிய பாஷையும் மதமும் முக்கியத் தன்மையற்ற புற ஆசாரங் கள் மாத்திரமேயன்றி விவாக முறை முதலிய முக்கிய ஆசாரங்களும் அழிந்து மறைகின்றன. அந்த நாகரிகத்தை காத்து வந்த ஜனங்கள் பலமுடைய நாகரிகங்களின் பாஷை, மதம் முதலியவற்றைக் கைக்கொள்கிருர்கள். பிலிப்பைன் தீவில் அமெரிக்க நாகரிகம் இவ்வகை வெற்றி யடைந்திருக்கிறது. ஆனல் நம்முடைய ஹிந்து நாகரிகம் இங்ங்னம் சக்தியற்ற வஸ்துவன்று. பிற நாகரிகங்களுடன் கலப்பதல்ை இதற்குச் சேதம் நேருமென்று நாம் சிறி தேனும் கவலைப் படவேண்டிய அவசியமில்லை. உலகத்தி லுள்ள நாகரிகங்கள் எல்லாவற்றிலும் நம்முடைய நாகரிகம் அதிக சக்தியுடையது. இது மற்றெந்த்