பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. தமிழ்நாடே சரியான களம் (தமிழ் நாட்டின் விழிப்பு) 25 ஜனவரி, 1918 ஜீவஹிம்ஸை கூடாது. மது மாம்ஸங்களால் பெரும் பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது. மது மாம்ஸங் கள் இல்லாதிருந்தால் பிராமணருக்குப் பெரிய கீர்த்தி. அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக் கூடிய அநுஷ்டானம். ஆனலும், தாம் ஒரு காரியத்தைச் செய்யாமலிருக்கு மிடத்து, அதைப் பிறர் செய்யும்போது அஸ் அயை கொள் வது தவறு. ஊண், உடை, பெண் கொடுக்கல் வாங்கல் முதலிய விஷயங்களில் மூடத்தனமாகக் கட்டுப்பாடுகளும் விதி களும், தடைகளும் கட்டுவதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது. மேலும் உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. "இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிருர்களே யென்பதை நினைத்து நான் கண்ணிர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவ தில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு. சகல மனிதரும் சகோதரர். மனுஷ்ய வர்க்கம் ஒருயிர். இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமாக ஆசாரச் சுவர்கள் கட்டி, "நான் வேறு ஜாதி. என் மைத் துனன் வேறு ஜாதி, இருவருக்குள் பந்தி போஜனம் கிடை