பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 யாது. அவனை ஜாதிப்பிரஷ்டம் பண்ணவேண்டும்" என்பது சுத்த மடமை யென்பதைக் காட்டும் பொருட்டாக இத்தனை தூரம் எழுதினேனே தவிர வேறில்லை. தமிழ் நாட்டில் ஜாதி ஸம்பந்தமான மூட விதிகளும் ஆசாரங்களும் சடசடவென்று நொறுங்கி விழுகின்றன. அடுத்த விஷயம், பெண் விடுதலை. தமிழ் நாட்டில் பெண் விடுதலைக் கr க்குத் தலைவியாக பூரீமான் நீதிபதி சதாசிவய்யரின் பத்தினி மங்களாம்பிகை விளங்குகிரு.ர். பூரீ அனிபெசண்ட் இந்த விஷயத்தில் அவருக்குப் பெரிய திருஷ்டாந்தமாகவும், தூண்டுதலாகவும் நிற்கிருர். இவ்விருவராலும் இப்போது பாரத தேசத்தில் உண்மையான பெண் விடுதலை உண்டாக ஹேது ஏற்பட் டது. இவ்விருவருக்கும் தமிழுலகம் கடமைப்பட்டது. இவர்களுடைய கr என்னவென்ருல், ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம் உண்டு; புத்தியுண்டு: ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள் செத்த யந்திரங்களல்லர். உயிருள்ள செடி கொடிகளைப் போலவுமல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவேதான். புறவுறுப்புக்களில் மாறுதல், ஆத்மா ஒரே மாதிரி.' இதனை மறந்து அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணைகளாகக் கருதுவோர் மற்ருெரு திறத்தார். இரண்டும் பிழை. ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்று கோல்; ஜீவனிலே ஒரு பகுதி, சிவனும் பார்வதியும் போலே. விஷ்ணுவும் லக்ஷ்மியும் போலே. விஷ்ணுவும் சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்டதாகக் கதை