பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வைத்தது தமிழ் நாட்டிலன்ருே? சிதம்பரம் கோயிலுக் குள்ளே நடராஜாவுக்கு ஒரு சந்நதி, பெருமாளுக்கொரு சந்நதி, ரீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துருக்கப் பெண்ணைத் தேவியாக்கித் துலுக்க நாச்சியார் என்றுபெயர் கூறி வணங்குகிருர்கள். "எம்மதமும் சம்மதம்' என்ருர் ராமலிங்க ஸ்வாமி. உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன் களேந்து ஸர்வ ஸமய ஸ்மரஸ்க் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானல், அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலக முழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத் தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிருர்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்கு மென்கிருேம். மேலே சொன்னபடி, பரிபூரண ஸ்மத்வம் இல்லாத இடத்தில் நாம் ஆண் மக்களுடன் வாழமாட்டோம்’ என்று சொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும் புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மையுடையனவாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு தர்மத்துக்காக இறப்போரும் இறக்கத் தான் செய்கிரு.ர்கள் ஆதலால், சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங் கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்குப் பராசக்தி துணைபுரிவாள். வந்தே மாதரம்.