பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மேலும், நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப் பட்ட நூல்கள் அக்காலத்து பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்கவேண்டும். அருமை யான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால் சென்ற சில நூற்ருண்டு களாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகு ஸ்ாதாரண விஷயங்களே அலாதாரண அலெளகிக அந்த கார நடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானஞ் செய்து கொண்டார்கள். இடைக்காலத்து ஸங்கீதம் பாரத தேசத்து ஸங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து ஸங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதை யைப்போலவே ஸங்கீதத்திலும் நவரஸங்களின் தொழில் இருக்க வேண்டும். நவரஸங்களைப்பற்றி இந்தப் பத்திரிகை யிலே (சுதேசமித்திரன்) தனியாக ஒரு வியாஸம் பின் எழுதப்படும். இன்ன இன்ன ராகங்களிலே இன்ன இன்ன சமயங்களில் இன்ன இன்ன ரஸங்கள் தோன்றப் பாட வேண்டுமென்ற விதிகள் எல்லாம் பூர்வ காலத்து நூல் களிலே காணப்படுகின்றன. கீர்த்தனத்திலுள்ள சொற் களின் அர்த்தமும் ராகத்தின் ஒளியும் ரஸத்திலே ஒன்று பட்டிருக்க வேண்டும். தியாகையர் காலம்வரை நமது தேசத்து ஸங்கீதம் ஒளியுடனிருந்தது. பிறகு இதிலும் இருள் சேரத் தொடங்கிவிட்டது. பாட்டிலே ரஸச் சேர்க்கை கிடையாது. அப்படியே சேர்த்தாலும் சோக ரஸம் (கருணு ரஸம்) தான் சேர்ப்பார்கள். மற்றவை மடிந்து போயின. பாட்டுக் கிசைந்தபடி தாளம் என்பதுபோய் தாளத்துக் கிசைந்தபடி பாட்டாகிவிட்டது. இன்பத்தைக் காட்டி