பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 வருத்தமுண்டாகிறது. இதன் சம்பந்தமாகச் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய மஹா வித்வான் ஸ்வாமிநாதையர் சொல்லிய வார்த்தை யொன்று நமது நெஞ்சை விட்டு ஒருபோதும் அகல மாட்டாது. மேற்படி காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் ஒரு "மீட்டிங் நடந்தது. தமிழ்ப் பாஷையின் அருமையைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தது. அப்போது ஸ்வாமி நாத ஐயரவர்கள் எழுந்து பின்வருமாறு பேசினர்:"ஆங்கிலேயே பாஷையின் இலக்கிய நூல்களில் எத்த னையோ அருமையான கருத்துக்கள் ததும்பிக் கிடப்பதாகக் சொல்கிருர்கள். அந்தப் பாஷை எனக்குத் தெரியாது. அதல்ை அவ் விஷயத்தில் ஒரு விதமான அபிப்பிராயமும் என்னல் கொடுக்க முடியாது. என்ற போதிலும் மேற் கண்டவாறு சொல்வோர் தமிழ்ப் பாஷையிலே அவ்வித மான அருமையான விஷயங்கள் கிடையாவென்று சொல் லும் பொழுது உடன் எனக்கு வருத்தமுண்டாகிறது. இவ்வகுப்பினர்களுடன் நான் எத்தனை முறையோ சம் பாஷணை செய்திருக்கிறேன். அந்தச் சமயங்களிலே நான் இவர்களது தமிழ் வன்மையைப் பரிசோதனை புரிந்திருக் கிறேன். இவர்கள் அத்தனை சிறந்த பண்டிதர்களென்று எனக்குப் புலப்படவில்லை. பழங்காலத்துத் தமிழ் நூல் களிற் பயிற்சி யில்லாத இவர்கள் அவற்றைப் பற்றி இழி வான அபிப்பிராயம் கொடுப்பதுதான் வெறுக்கத் தக்க தாக இருக்கின்றது. ஆனையையே பார்த்திராத குருடஞ. அதன் நிறம் முதலியவற்றைப் பற்றி ஒர் அபிப்பிராயம் கொடுக்க வேண்டும்? “போப் முதலான விற்பன்னர்கள் இவர்கள் இருக்கும் திசை நோக்கிக் காறியுமிழும் வண்ண மாக நம்மவர்களிற் சிலர் நடந்து கொள்கிருர்களென்று மேற்கூறப்பட்ட "மித்திரன் குறிப்பில் எழுதபட்டிருப் பதை நாம் முற்றும் அங்கீகாரம் செய்கிருேம். to str.—6