பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அதுவும் வேண்டாமா? 'சுதேசமித்திரன் பத்திரிகையை சென்ற 15 வருஷங்களாகப் படித்து வரும் ஒர் ஐயங்கார் நமது நிதானக் கட்சித் தலைவராகிய பூரீ கோகளேயின் பெயரைத் தப்பாக உச்சரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். "தங்கம்' என்ற சொல்லில் 'க' உச்சரிப்பது போல அப்பெய ரின் முதலெழுத்தாகிய 'கோ' (Go)வை வலிதாகச் சொல்ல வேண்டும். பிராமணர் 'கோபுரம் என்று சொல்லும்போது 'கோ'வை எப்படிச் சொல்லுகிருர்களோ அதுபோலக் கோகளே'யின் முதலெழுத்தைச் சொல்ல வேண்டும். இரண்டாவதெழுத்தாகிய 'க' என்பதை "க்ஹ" என்ற ஒலி இலேசாகத் தோன்றும்படி அழுத்தி உச்சரிக்கவேண்டும். மகம்' என்று வைதிகப் பிராமணர் சொல்வது போலே. டிெ ஐயங்கார் இதை கோஹலே என்று சொன்னர். அவர் மேல் குற்றமில்லை; 'சுதேச மித்திரன்' மேலும் குற்றமில்லை; தமிழில் எழுத்துக் குறை கிறது. பெள்ளாரி, குத்தி, பஞரஸ், பம்பாய்-என்று நாட்டு ஊர்ப் பெயர்களைக்கூட நாம் விபரீதமாக எழுதும்படி நேரிட்டிருக்கிறது. இதற்கென்ன விமோசனம்? கல்கத்தாவில் இருக்கும்போது ரீமான் அரவிந்த கோஷ் (இவர் பெயரையும் தமிழில் சரியாக எழுத இடமில்லை. "Ghosh" என்பதை "Cosh" என்று எழுத நேரிடுகிறது!)-ழரீமான் அரவிந்தர் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பினராம். அங்குத் தென்னாட்டு மனிதர் ஒருவர் இவருக்கு நமது அரிச்சுவடி முழுதும் கற்றுக் கொடுத்தார். முதல் பாடப் புஸ்தகமும் நடந்தது. அப்படியிருக்கும் ஒருநாள் ஒரு தமிழ் நாட்டுப் பத்திரிகை அகப்பட்டது. அதில்,"பீரேந்திரநாத் தத்த குப்தர் வழக்கு என்று மகுட மிட்டு ஒரு வியாஸம் எழுதியிருந்தது.