பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அதைப் பார்த்துவிட்டு அரவிந்தர் தமது தமிழ் வாத்தியாரிடம், "இதென்ன' என்று கேட்டார். வாத்தியார், "இது ஒரு பெங்காளிப் பெயர் என்று சொன்னராம். அரவிந்தர் மயங்கிப் போய். "எப்படி? என்று கேட்டார். surrágurf, “Birendranath Dutta Gupta” srairpl அச் சொல்லைப் பெங்காளி ரூபத்திலே சொன்னர். "இங்கிலீஷ் தெரியாத கிராமத்துத் தமிழர் இச் சொல்லை எப்படி வாசிப்பார்கள்?' என்று அரவிந்தர் கேட்டார். “Ềii aurrst345g GunravĠau Pirendiranata Tatta Kuptar (t...த) என்றுதான் வாசிப்பார்கள்' என்று வாத்தியார் சொன்னராம். இன்றும் அரவிந்தர் இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிரு.ர். நமது பத்திரிகைகளில் ஐரோப்பாவிலுள்ள நகரங்கள், மலைகள், முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும்போது கண் கூசுகிறது. அதைத் தமிழ் மாத்திரம் அறிந்த தமிழர் எப்படி வாசிப்பார்களென்பதை நினைக்கும்போதே காது கூசுகிறது. இங்கிலீஷ் அrரத்தில் ப்ரெஞ்ச், அரபி, பார்ஸி, ஸ்ம்ஸ்க்ருதம் முதலிய பாஷைகளின் பதங்கள் சிலவற்றை எழுதுவதற்கு இங்கிலீஷ் அரிச்சுவடி இடங்கொடாததைக் கருதிச் சில புதிய குறிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிருர் கள். எல்லா ஐரோப்பிய பாஷைகளுமே அந்நிய பாஷை களிலுள்ள விசேஷ உச்சரிப்புகளுக்கு இணங்கும்படி சில