பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 தனிக் குறிகள் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டிருக் கின்றன. நாமும் அப்படியே சில விசேஷக் குறிகள் ஏற்பாடு செய்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். ஏற்கெனெவே நான் இந்தக் குறையை நீக்கும் பொருட் டாக மிகவும் சுலபமாக ஐந்து நிமிஷங்களில் யாரும் கற்றுக் கொள்ளக்கூடிய சில குறிகள் தயார் செய்து வைத்திருக் கிறேன். ஆனால் இப் புதிய வழியைத் தமிழ் நாட்டுப் பத்திராதிபர்களும் பிறரும் அறியும்படி துண்டுப் பத்திரி கைகள் போட்டு வேலை செய்வதற்கு வேண்டிய செளகர்யங் கள் எனக்கு இன்னும் சில மாதங்கள் கழிந்த பிறகுதான் ஏற்படும். இப் புதிய உபாயத்தை அனுஸரிப்பதால் இப்போது நாமெல்லோரும் எழுதி வரும் முறைமைக்கு யாதொரு ஸங்கடமும் உண்டாகாது புதிய குறிகள் தெரியாதவர்கள் கூட வழக்கம் போலவே படித்துக் கொண்டு போவர்ர்கள். யாருக்கும் எவ்விதமான சிரமமும் ஏற்படாது. நமது பாஷைக்கு நமது அரிச்சுவடி போதும். அந்நிய தேசப்பெயர் கள் முதலியவற்றுக்காக மாத்திரமே இப் புதிய முறை ஏற்பட்டது. எனது புதிய முறையை இப்போதே அறிந்து கொள்ள விரும்புவோர் கீழே கண்ட என் விலாசத்துக்கு இரண்டன தபால் முத்திரை வைத்தனுப்பினல் அவர் களுக்கு இம் முறையை நல்ல கையெழுத்தில் தெளிவாக எழுதுவித்து அனுப்புகிறேன். 2 ஜ, ஷ, ஸ, ஹ, r என்ற எழுத்துக்களைத் தமிழ் அரிச் சுவடியில் நமது பூர்விகர் சேர்த்திருக்கிருர்கள். இவற்றைச் சேர்க்காவிட்டால் தமிழ் நேரே பேச முடியாமலும் எழுத