பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை "பாரத தேசத்து ஸங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து ஸங்கீதத்தைக் காட்டிலும் மேலானது". இது பாரதியார் வாக்கு. மற்ருே.ரிடத்திலே அவரே சொல்லு கிரு.ர். பலதேசத்து ஸங்கீதங்களையும் நான் ஒருவாறு ஒப்பிட் டுப் பார்த்திருக்கிறேன். நமது புராதன ஸங்கீதத்திற்கு நிகரானது இவ்வுலகத்தில் வேறெங்குமில்லை என்பது என்னுடைய முடிவு:-தராசு. ஏதோ, நம்முடையது' என்பதற்காக பாரதியார் இவ்வாறு புகழ்ந்து பேசவில்லே. உண்மை இதுவேயாகும். இதை உலகத்திலுள்ள பெரிய நாடுகள் பலவும் இன்று உணர்ந்து கொண்டிருக்கின்றன. காலே எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் கல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா இவ்வாறு பாப்பாவுக்கு அன்போடு கூறுகின்ருர் பாரதியார். பாடல்களிலே ஒரு வைரமணி போன்ற அழகு வாய்ந்தது பாப்பாப் பாட்டு. குழந்தைக்கு வேண்டிய அத்தனை அறிவுரைகளேயும் அதிலே தீட்டியிருக்கிரு.ர்.