பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఉుఖfr ஒடி விளையாடு பாப்பா எது தொடங்கியவர் எல்ல உயிர்களிடத்திலும் அன்பு கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை கூறிவிட்டு அடுத்தபடியாகக் காலே எழுந்தவுடன் படிப்பு என்று தொடங்கிப் பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிருர் பாரதியார். இப்படிப் பாடுகின்றவர் பாட்டின் பெருமையை நன்கு உணர்ந்ததோடு இசைக் கலையிலே சிறந்த ஞானம் உடை யவர் என்பதும் அவர் பாடியுள்ள பாடல்களிலிருந்தும், எழுதியுள்ள கட்டுரைகளிலிருந்தும் நன்கு வெளிப்படு கின்றது. கானத்திலே அமுதாக நிறைந்த-கவிதையிலே உயர் நாடு' என்று பாரத நாட்டைப் புகழ்ந்து பேசுகின்ற பாரதியார் தமது இஷ்ட தெய்வமான பராசக்தியை பாட்டில் வந்த களியே சக்தி' என்று போற்றுகிரு.ரி. அந்த சக்தித் தாயை நினைந்து "எந்த நாளும் தாயே. நின் மீதிசைகள் பாடி வாழ்வேன்” என்கிரு.ர். இசைவாணர்களிடத்திலே பாரதியாருக்கு அளவற்ற மதிப்பு உண்டு. எட்டயபுரம் சமஸ்தானத்தில் விளங்கிய சுப்பராம தீட்சிதர் காலஞ்சென்றபோது பாரதியார் பாடிய இரங்கற் பாக்களிலிருந்து இது நன்கு வெளியா கின்றது. மன்னர்களையும் பொய்ஞ்ஞான மதக் குரவர் களையும் பாரதியார் வணங்குவதில்லையாம். ஆளுல் கப்பராம தீட்சிதருடைய இசைக் கலையின் அருமை தெரிந்து அவரிடம் தலை தாழ்த்தி வந்தாராம்.

  • மன்ன ரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர் தங்களையும் வணங்கலாதேன்