பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

žವಿ ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஒசைதரும் இன்பம் உவமையிலா இன்பன்ைருே? இவ்வாறு வியந்து போற்றும் பாரதியார் பாட்டிலும் இசையிலும் எவ்வளவு ஊறித் திளைத்திருக்கின்ருர் என்பது சொல்லாமலே விளங்கும். ஆகவே அவர் பாட்டைப் பற்றித் தமது எண்ணத்தை உரைநடைப் பகுதியிலே விரிவாகக் கூறும்போது அதை எல்லாரும் ஊன்றிக் கவனத்தில் கொள்வது நல்லது. இதைத் தெளிவுபடுத்தவே இதுவரை அவருடைய கவிதைகளிலிருந்து சில பகுதிகளை எடுத்துக் காட்டினேன். மேலும் பல பகுதிகளைப் பிற்சேர்க்கை யாகக் கொடுத் துள்ளேன். பாட்டு என்ற தலைப்புக் கொடுத்து பாரதியார் விரிவான கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். இது ஆறு பகுதிகளாக சுதேசமித்திரனில் கீழ்க்கண்ட தேதிகளில் வெளியாகி இருக்கின்றன. I. 3, மே 1917 2. 4, மே 1916 3. II, Gun #916 4, 27, (Ειο 1916 5 29, gèar 3916 *6. 19, gఅడి) 1916 இன்று சென்னை மாநகரிலும், வேறு சில முக்கியமான பட்டணங்களிலும் சங்கீத சபைகள் புதிது புதிதாகத்

  • இந்த ஆறு கட்டுரைகளையும் தொகுத்து சங்கீத விஷயம் என்ற ஒரே தலைப்பில் நீண்ட கட்டுரையாக முன்பு பாரதி வசனத் தொகுப்பில் வெளியிட்டுள்ளார்கள். அது பாரதி பிரசுராலயத்திலிருந்து வெளி வந்ததாகும் ,