பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3i கலந்தும் தோன்றக் கூடும். ரஸ உணர்ச்சியிலே உள் ளத்தை முழுதும் ஈடுபடுத்தக்கூடிய சிலர் கவிதை, பாட்டு, சித்திரம் முதலிய தெய்வக் கலைகளிலே சிறப்படை கிருர்கள். ரஸ உணர்ச்சி இல்லாவிடின், இக் கலைகள் நசித் துப் போகும். பிறர் துன்பத்தைக் காணும்போது தனது துன்பம் போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும் பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப் பழகுவாராயின், முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்; பிந்தியவன் பதங் களேப் பின்னுவான்; இவனுடைய தொழிலிலே கவிதை இராது. இப்படியேதான் ஒவ்வொன்றிலும். ரஸ் ஞான மில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் லங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிருர்கள். இக் காலத்து ஸங்கீத வித்வான்களிலே பலர் ஸங்கீதத்திற்கு நவரசங் களே உயிர்' என்பதை அறியாதவர். முத்துசாமி தீவிதர். தியாகையர், பட்டணம் சுப்பிர மணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சில வற்றை அதிக ஸங்கதிகளுடன் பாடுவோரே முதல்தர வித்துவான். இந்தக் கீர்த்தனங்களெல்லாம் ஸ்ம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி வித்வான்' களுக்கு இந்தக் கீர்த் தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களேயும் பதங் களையும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகிருர்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரஸ்ம் தெரிய நியாயம் இல்லை. நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்கு