பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தில்லை. உள்ளத்திலே தைர்யம். ஸந்தோஷம், வலிமை முத விய சுப லகடிணங்கள் தமிழரைக் காட்டிலும் வட நாட்டு ஜனங்களிடம் சிறிது அதிகமாகத் தோன்றுகின்றன. முன் னெல்லாம் தமிழ் நாட்டிலேதான் இந்த குணங்கள் மிகவும் விசேஷமாக விளங்கின. இப்போது சில வருஷங்களாகக் குறைவு பட்டிருக்கின்றன. இந்த குணங்களை நமது ஜனங் களெல்லோருாம் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். ஸங்கீத வித்வான்கள் இவற்றைப்பழக்கப் படுத்தினுல்தான் அவர்கள் கண்டத்தில் உவகையும் வீரமும் பிறக்கும். பாட் டிலே களையுண்டாகும். 2 தமிழ்நாட்டு வித்வான்களுடைய ஸங்கீதத்தைப் பற்றி மேலே எழுதினேன். மற்ற சாதாரண ஜனங்கள் பாடும் பாட்டைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய விரும்பு கிறேன். இந்தப் புதிய பகுதி தொடங்கு முன் மேற்படி சங்கீத வித்வான்களிடம் உள்ள நன்மையையும் சொல்ல வேண்டாமா? பெயர்கள் குறிப்பிடாதது பற்றி மன்னிப்பு வேண்டுகிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நாட்டில் உள்ள ஜில்லாக்களிலே ஒவ்வொன்றிலும் இக்காலத்தில் கருவிகளிலும்வாய்ப்பாட்டிலும் புகழ்பெற்ற வித்வான்கள் பலர் இருக்கின்றனர். காலத்தின் சீர்க் கேட்டாலும், லம்ப்ரதாய பங்கத்தின லும் நவரலங்களுக்கும், பாட்டுக்கும் உள்ள தொடர்பை மறந்து விட்டபோதிலும், இவர்களிலே சிலர் (ஆனும் பெண்ணும்) ஸரஸ்வதி கடாகrத்தினுல் தம்மை அறியா மலே அற்புதமான வேலை செய்கிருர்கள். சில சமயங்களில் ஒரிரண்டு ரஸங்களைத் தெரிந்தே பாட்டில் இசைக்கிருர்கள். அப்போது இவர்களுடைய பாட்டு அல்லது வாத்தியம்