பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 * பெண்களுக்குத் தாளஞானம் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் சிரமமென்றும், இயற்கையிலே அவர்களுக்கு 'லய வுணர்ச்சி" கொஞ்சம் குறைவென்றும் சிலர் தப்பாகநினைக் கிரு.ர்கள். பெண்கள் குதித்துப் பாடும்போது பாருங்கள். ‘டனிர் டணிர்' என்று எப்படித் தாளம் விழுகிறது. நமது பெண்கள் கீர்த்தனங்கள் முதலியவற்றைத் தாளமில்லாமற் பாடுவதற்குக் காரணம் பயிற்சிக் குறைவேயல்லாது வேருென்றுமில்லே. அவர்களுக்கு நாம் சரியானபடி பாட்டுக் கற்றுக் கொடுப்பதில்லே. " தாளிகளா? கச்சேரி நடத்தப்போகிருர்களா? தாளம் தவருமல் பாடி என்ன ஆகவேண்டும்?' என்று சிலர் பேசுவ துண்டு. தாளம் தவறிப் பாடினுல் காதுக்கு விரஸ்மாக "σλ, η ξκει ή εγ, τκrrξ, τιτντς :: κα ι - ماه و ۱ پیمم و * و هم இருக்கும். ஜனங்களுக்குப் பிரிய முண்டாகாது. வீட்டிலும் அதே காரனந்தான். எனது மகள் பிழையாகப் பாடினுல், பக்கத்தில் இருந்து கேட்கும் எனது காதுக்கு லாகப்படாது. அவளுக்கும் பாட்டில் நல்ல ருசி ஏற்படாது. பெண்கள் பாடவே கூடாதென்று ஒரேயடியாக நிறுத் விட்டீர்களாளுல் ஒரு தொல்லைபுமில்லை. பிறகு உலக வாழ்வுமில்லை. கல்யாணப் பாட்டுக்களும், தாலாட்டுப் பாட்டுக்களும், காதற் பாட்டுக்களும் நின்றுபோனுல், பிறகு சுடுகாடுதான் மிச்சமிருக்கும். அப்படி நிறுத்த வேண்டுமென்று எவனும் விரும்பமாட்டான். ஆண்களைப் போலவே பெண்களும் எப்போதும் பாடத்தான் செய் வார்கள். ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு வங்கீதத்திலே அதிகத் தொடர்பு உண்டு. "செய்வன திருந்தச் செய்." பாட்டுப் பாடவிரும்புவோர் நல்ல பாட்டிற் பழகவேண்டும். பாட்டுக் கேட்க் விரும் புவோர் நல்ல பாட்டுக் கேட்கவழி தேடவேண்டும். பாட்டினுல் மகிழ்ச்சி உண்டாகிறது. லசுமி கடாrம் ஏற்படுகிறது; உபசாந்தி பிறக்கிறது.