பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. ஹார்மோனியம் தமிழ்நாட்டு மாதர்களுக்குள்ளே நல்ல பாட்டுவளர்ச்சி பெறவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனல், அதற்கு ஹார்மோனியப் பெட்டி ஒரு விக்கினமாக வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் பெட்டி நமது நாட்டிலே பழகு வதினுல் சங்கீதத்திற்குப் பல விதமான தீங்கு உண்டா வதாக வித்வான்களிலே பெரும்பாலோர் ஒப்புக்கொள் கிருர்கள். ஆனல் அதை நிறுத்துவதற்கு யாரும் வழி தேட வில்லை. நமது ஸங்கீதத்திலுள்ள சுருள்கள் வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்டமுடியாது. ஆதலால், அந்த வாத்தியத்தில் அதிகம் பழக்கமுடை யோரிடம் நமது ஸங்கீதத்தில் உள்ள விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன. இதையெல்லாங்காட்டிலும், அந்தப் பெட்டி போடுகிற பெருங்கூச்சல்தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது. மேலும், ஸங்கீதத்திலே கொஞ்சமேனும் பழக்க மில்லாதவர்களுக்கெல்லாம் இந்தக் கருவியைக் கண்ட வுடனே 'ஷோக் பிறந்து விடுகிறது. சத்த முண்டாக்குவ தற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாகப் பின்னே வைத் திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி, முன் பக்கத்துச் சாவிகளே இழுத்துவிட்டு, துருத்தியை அசைத் தால், 'ஹோ' என்ற சத்த முண்டாகிறது. உடனே பாமர னுக்கு மிகுந்த சந்தோஷ முண்டாகிறது. "நாம் அல்லவா இந்த இசையை யுண்டாக்கினுேம்?' என்று நினைத்துக் கொள்கிருன். உடனே வெள்ளேக் கட்டைகளையும் கருப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டுக் தட்டுகிருன். பேஷான தொனிகள்! மேலான தொனிகள! பாமரன் பூரித்துப் போகிருன். முதல் நாள், முதல் தடவை, தொட்ட மாத்