பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 திரத்திலே இவ்வளவு கோலாஹலம் உண்டாகிறது. பிறகு ஸரளி, அலங்காரம், பிள்ளேயார் கீதம், சங்கராபரண வர்ணம், பவதுத கீர்த்தனம்-இத்தனையும், ஹார்மோனி யத்தில் மூன்று , மாதத்திற்குள் பழக்கமாய் விடுகிறது. பாமரனின் மனதிலே "நாம் ஒரு வித்வான்' என்ற ஞாப கம் உறுதியாகப் பதிந்து விடுகிறது. ராக விஸ்தாரங்களைத் தொடங்கி விடுகிருன். ஒரு வீட்டில் "ஹார்மோனியம்' வாசித்தால் பக்கத்திலே ஐம்பது வீட்டுக்குக் கேட்கிறது. அறியாதவன் தனது அறியாமையை வீட்டில் இருந்த படியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரசாரம் பண்ண வேண்டுமானுல், அதற்கு இந்தக் கருவியைப்போலே உதவி வேருென்றுமில்லை. வீணே தவருக வாசித்தால் வீட்டில் உள்ள ஜனங்களுக்கு மாத்திரத்தான் துன்பம்; ஹார்மோ னியம் தெரு முழுவதையும் ஹிம்ஸைப் படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானல், கிராமந்தோறும் "நாலைந்து ஹார்மோனியம்” பரவும்படி செய்தால்போதும். நாடகக்காரர் வாய்ப்பாட்டுக்குச் சுருதி போடும் பொருட்டு இதை வைத்துக் கொள்ளுதல் ஒரு வேளை பொருந்தும். ஸாமான்ய ஜனங்கள் இதை சுருதிக்கு வைத் துக் கொள்வதஞல் பல தீங்குகள் உண்டாகின்றன. இத் தீங்குகள் யாவை என்பதையும் நமது நாட்டுக்குப் பொருத்தமான வாத்தியங்கள் எவை என்பதையும், பெண் கள் பாட்டை நேராக்குவதற்கு இன்னும் என்ன வழிகள் தேடவேண்டு மென்பதையும் ஆராய்ச்சி செய்வோம். தம்பூர் நாடகக்காரர் தவிர மற்ற ஸாமான்ய ஜனங்கள் வீடுகளி லும் பஜனைக் கூடங்களிலும் பாடும்போது தம்பூர் சுருதி வைத்துக் கொள்வதே பொருந்தும். ஹார்மோனியம்