பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 பேரிரைச்சல் போடுவதிலே பாட்டின் சத்தம் கணிரென்று கேட்பதில்லை. பாட்டுக் கீழாகவும் சுருதி மேலாகவும் நிற்கிறது. அஸாதாரணமான உச்ச சாரீரமுடைய சிலர் மாத்திரமே ஹார்மோனியத்தின் சுருதிக்கு மேலே பாடக் கூடும்; பொதுப்படையாக சாத்தியமில்லை. பாட்டுக்கு உதவியாக சுருதி ஒலிக்கவேண்டும். பாட்டை விழுங்கும் சுருதி பிரயோஜனமில்லை. அது வெறும் மடமை. cటీ &ar வாத்தியம் படிக்க விரும்பும் ஸ்திரீகள் வீணை பழக வேண்டும். வீணை ஆரம்பத்திலே கொஞ்சம் சிரமம். போகப் போக ஸ்-லபமாய் விடும். இந்தக் கருவியிலே தேர்ச்சியேற்பட்டால் அதுதான் வாஸ்தவமான ஸங்கீதத் தேர்ச்சியாகும். பெண்கள் வீணை வாசிப்பதினால், நாட்டிலே ரஸப்பயிற்சியும் வாழ்க்கை நயமும் உண்டாகும். மைசூரி லும் மலையாளத்திலும் பழகியவர்களுக்கு, பெண்கள் வீணை கற்றுக் கொள்ளுதல் சிரமமில்லை என்பது தெரியும். வீணை பழகினுல் அதிலேயே நல்ல தாளஞானம் உண்டாய் விடும். வீணை மனிதர் குரல் போலவே பேசும். இன்பச் சுருள்களுக்கும் பின்னல்களுக்கும் வீணே மிகவும் பொருத்த மானது. அதன் ஒலி சாந்திமயமானது. ஸரஸ்வதி தனது கையில் வீணையை தரித்துக்கொண்டிருக்கிருள். காளிதாஸ் கவி பராசக்தியைப் பாடும்போது "மாணிக்ய வீனும் உடலாலயந்தீம்" என்று தொடங்குகிரு.ர். பொய்த் தொண்டை ஆணுயினும் பெண்ணுயினும் கள்ளத்தொண்டை வைத்துக்கொண்டு பாடலாகாது. தொண்டையைத் திறந்து பாடினுல்தான் சுகமுண்டாகும். இயற்கையிலே ஆணுக்குக் கனமாக குரலும், பெண்ணுக்கு ஸ்ன்னமான