பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Jo (4) தெள்ளேனம் (நடுவே ஒரு பெரிய முரசை வைத் துக்கொண்டு, பெண்கள் சுற்றியிருந்து இரண்டு கைகளி லும் கோல் கொண்டு கொட்டி அந்தத் தாளத்திற்கு இசையப் பாடுதல்.) (5) கண்ணம் இடித்தல். சுண்ணமென்பது கந்தப் பொடி. (6) சாழல். (?) உந்தி. (இவ்விரண்டும் பெண்களுடைய விளையாட்டு என்று தெளிவாகிறது. ஆனல் விளையாட்டின் விவரங்கள் தெரிய வில்லை.) (8) பூவல்லி (பெண்கள் பூக் கொய்யும்போது பாடு வது.) (9) தோணுேக்கம் (பெண்கள் தோள் கோத்துப் பாடிக் குதிப்பது.) (10) ஊசல் (இதை இக்காலத்தில் "ஊஞ்சற் பாட்டு' என்கிருேம்.) (11) காலைத் துயில் எழுப்பும் பாட்டு. இங்ங்னம், தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி முதலிய வேறு பல வகைகளுமிருந்தன. பிள்ளைத் தமிழ்' என்ற நூல் வகுப்பைக் காண்க. இவற்றிலே, தாலாட்டு, ஊஞ்சல், அம்மானை, பள்ளியெழுச்சி என்ற நான்கு வகை யும் வெவ்வேறு சந்தங்களுடன் இக்காலத்தில் நமது பெண் களுக்குள் வழங்கி வருதல் காண்கிருேம். பழைய காலத்து வகைகளை நாம் விஸ்தாரமாகக் கவனிப்பதற்கு வேண்டிய லெளகரியங்கள் இல்லை. ஆதலால், பெயர் மாத்திரமே குறிப்பிட்டிருக்கிருேம்.