பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 குடும்பத்துப் பெண்களிலே சாஸ்திரப்படி ஸங்கீதம் கற்றுக்கொள்வோரின் தொகை மிகவும் குறைவு. நகரப் பழக்கமும் சுக ஜீவனமும் உடைய குடும்பங்களில் மாத்தி ரமே பெண்களுக்கு வாத்தியார் வைத்துப் பாட்டுக் கற்றுக் கொடுக்கிரு.ர்கள். ஆயினும், வாத்தியார் இல்லாமல் சாஸ்திர வழிகளில் வாஸனை ஏற்பட்டவர் பலர் உண்டு. இவர்களை யல்லாது, பொதுப் படையாகப் பார்க்கு மிடத்து, நமது மாதர் பாட்டுக்களின் இனம் பின்வருமாறு: (1) கல்யாணப் பாட்டு, நலங்கு, பத்யம், ஊஞ்சல், ஒடம் முதலியன. (2) கும்மிப் பாட்டு. குதித்துப் பாடுகிற பாட்டுக்கள். இவ் வகுப்பில், கிளிப் பாட்டு, பல்லிப்பாட்டு முதலியன வும் அடங்கும். (3) அம்மானை, துாது, மாலை, சோபனம் முதலிய நீண்ட கதைப் பாட்டுக்கள். (4) பொதுத் தாலாட்டு, விளேயாட்டுப் பாட்டுக்கள், ஜாவளிகள், கீர்த்தனை முதலியன. மேலும், பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள், நெல் குத்துவோர், சுண்ணும்பு இடிப்போர், குறிகாரி, தொம்பச்சி முதலிய வகுப்பினர் தமக்கென்று தனியான மெட்டுக்கள் வைத்துக் கொண்டிருக்கிருர்கள். மேற்கூறப் பட்ட பாட்டுக்களில் மிக இன்பமான சந்தங்கள் பல இருக் கின்றன. இவை கால வெள்ளத்தில் மறைந்துபோகு முன் பாக ஸங்கீத வித்வான்கள் பொறுக்கியெடுத்து ஸ்வர நிச்சயம் செய்து வித்தைப் பழக்கத்திலே சேர்த்து விட வேண்டும்.