பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெண்களுக்குக் கல்விப் பயிற்சி ஏற்பட்டால் அப் போதுள்ள கொச்சை மொழிகளும், பிழைகளும், ரஸ்க் குறைவும் . பொருந்திய பாட்டுகளே மறந்து விடுவார்கள். ஆனால், அத்துடன் பழைய ஸங்கீதக்கட்டுக்களே மறந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய வழி களே முற்றிலும் மறந்துபோய் நமது பெண்கள் நாடக மெட்டுக்கள் முவலியவற்றையே பாடத் தொடங்கிவிட் டால், தமிழ் நாட்டில் ஸங்கீத வுணர்ச்சி நாசமாய்விட ஹேது உண்டாகும். கொச்சை மொழிகளும் ரஸ்க் குறைவும் மலிந்த பாட்டுக்களென்று சொன்ளுேம். ஆனால் ஒரு கூடைப்பதரில் ஒருழக்கு அரிசியகப்படும். அதை நாம் இழந்துவிடக்கூடாது. கவிதைத் தேட்டமுடையோர் நமது பெண்களின் பாட்டைத் தேடிப் பார்த்தால், சிற்சில விடங்களில் நல்ல கவிதை கிடைக்கும். பாட்டி, ராமாயணத்தில் குசலவரின் கதையை ஒரு நீளப்பாட்டாகச் சொல்லுவாள். அதில சீதையின் கஷ்டங்களேக் கேட்கும்போது குழந்தைகளெல் லாம் கண்ணிர் விட்டழும். ராமனேக் குசலவர் வெல்லும் இடத்து வரும்போது மனதிலே ஆத்திரம் பொங்கும். "ராமனுக்கு வேணும்; நன்ருக வேணும்' என்று தோன்றும். நலங்குப் பாட்டு, கும்மி முதலியவற்றிலேகூடச் சில இடங் களிலே முத்துபோல வார்த்தைகள் அகப்படும். தொழிற் பெண்களின் பாட்டு மிகவும் ரளமானது. சந்தமும் இன்பம்; ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை. பெண்களின் பாட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தங் களில் பெரும் பகுதி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் சம்பந்தமாக இங்கே இன்னும் சில வார்த்தைகள்