பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 அபிநயம் கூத்தில் அபிநயமே பிரதானம் தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலே தோற்றுவிப்பதே கூத்தின் உடல். அபிநயமே கூத்தின் உயிர். தாளந் தவருமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது. தற்காலத்தில் சில பாகவதர்கள் கதாகாலகேஷபங் களில் இடையே கொஞ்சம் கூத்தாடிக் காட்டுகிருர்கள். இதற்குச் சிலர், பட்டணம் கிருஷ்ண பாகவதரின் வழி' என்று பெயர் சொல்லுகிருர்கள். இந்தக் கூத்து வெறுமே யதார்த்த நாட்டியமென்று பிறர் நினைக்க வேண்டும்’ என்று உத்தேசித்தே அந்த பாகவதர்கள் அப்படிச் செய் கிருர்கள். ஆதலால், அதில் பலவித அபிநயம் பிடிக் கிருர்கள். பாகவதர் ஒருவர் வேதபுரத்தில் நந்தனர் சரித்திரம் நடத்தினர். நந்தன் அடிமை, ஐயர் ஆண்டை. ஐயருக்கு முன்னே நந்தன் போய் நிற்கிருன். நைச்ய பாவம் என்பது நைச்யத் தோற்றம், நைச்யம் என்பது நீசன் என்ற சொல்லடியாகத் தோன்றி நீசத்தன்மை என்று பொருள்படும் குணப்பெயர். இங்கு நீசன் என்பது அடிமை. எனவே நைச்ய பாவ மெனருல் அடிமைத் தோற்றம். இதை, அந்த பாகவதர் பல அபிநயங்களினுற் காட்டினர். நிரம்ப நேர்த்தியான வேலை செய்தார். புருவத்தை அசைக்