பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 உச்சஸ்தாபிதான் எப்போதும் நல்லது. உடம்பை நிமிர்த்தி முகத்தை நேரே நிறுத்தி முகத்திலும் வாயிலும் கோணல் திருசலில்லாதபடி வாயை ஆவென்று சிங்கம் போலே திறந்து பாடவேண்டும். தொண்டையிலே கரகரப் பிருந்தால் வெறும் மிளகைத் தின்ன வேண்டும். கற்கண்டு சேர்ப்பது நல்லதில்லை. பாட்டுக் கச்சேரி நடத்தும்போது, நடுவிலே மற்ற வாத்தியக்காரரை வாசிக்கச் சொல்லிவிட்டுப் பாடகர் வெறுமே இருப்பதும், தெம்மாங்கு முதலான வேடிக்கைப் பாட்டுகள் பாடுவதும் தமக்கு ரஸப்படவில்லையென்று ரீநிவாசய்யங்கார் சொல்லுகிரு.ர். அதை நான் ஒரு பகுதி ஆக்ஷேபிக்கிறேன். வீணை, குழல் முதலிய இசைக் கருவிகளும் மத்தளம் முதலிய தாளக் கருவிகளும் வாய்ப் பாட்டின் உதவியில்லாமல் தனியே இன்பந்தருகின்றன. வாத்யம் எட்டாத ஸ்வரத்தைத் தொடப் போய்க் கஷ்டப்படாது. தொண்டையிலே கரகரப்பும், அடைப்பும் இருக்கும்போது கச்சேரி நடத்த வராது. சரியானபடி சுருதி சேர்ந்த பிறகுதான் தொழில் செய்யத் தொடங்கும். வீணேயும் குழலும் பறையும் வாய்ப்பாட்டில்லாமல் தனியே ஒலிப்பது பழைய நாளிலும் உண்டு. கண்ணன் குழலுக்கு இடைப்பெண் ஒத்துப்பாடியது முண்டு. எம்பெருமான் தனியே இசைப்பதுமுண்டு. தெம்மாங்கு முதலியன ஹாஸ்ய ரசத்தை உடையவை. அவற்றை முழுதும் நிறுத்திவிடக் கூடாது ஆல்ை ஒரே மெட்டை வளைத்து வளைத்துப் போன இடமெல்லாம் சொல்லிப் பயனில்லை. தமிழ் பிழையாகவும் பொருள் ரஸ்மில்லாமலும் பாட்டுக்கள் இருந்தால் அவற்றை மன்றிலே கொண்டு வருதல் நியாயமில்லை.