பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ðØ இருந்தாலும் மத்தளக்காரனுக்குப் பாட்டுக்காரன் பயந்து கட்டுப்பட்டு நடக்கும் விபரீதம் சில இடங்களிலே காணப்படுவதைக் கண்டனை செய்து பூரீநிவாலய்யங்காரி சொல்லும் வார்த்தை ஒப்புக்கொள்ளத் தக்கது. ஏனென்ருல் பாட்டுக்காரன் தனது பாட்டுக்களுக்குத் தவருமல் தாளம் போட்டு வரவேண்டும். இவ்வளவு தாள ஞானம் இருந்தால் பாடகனுக்குப் போதும் அதிகமிருந் தால் மிச்சம். இந்த விஷயந் தெரியாமல் மத்தளக்கார னுக்குப் பாட்டுக்காரன் பயப்படுவது மிகவும் வேடிக்கை. பூரீமான் ரீநிவாசய்யங்கார் ராகப் பழக்கம், வர்ணங்கள், கீர்த்தனங்கள் முதலிய விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பதெல்லாம் (பெரும்பகுதி) கேட்டவுடன் நியாயமென்று கொள்ளத்தக்கது. கீர்த்தனங்கள் பழகுவது மாத்திரம் அவரவிரிஷ்டப்படி போக வேண்டும். எது எப்படியாயினும் யாராவதொரு வித்வான் இந்தத் தமிழ் நாட்டுக்குப் புதிய கீர்த்தனங்கள் ஏற்படுத்தும் வழிகாட்டிக் கொடுத்தால், ஆயிரம் பேர் அதைப் பின் பற்றி மேன்மை பெறுவார்கள். குறிப்பு: இக்கட்டுரை 1916 டிசம்பர் 19 இல் எழுதப் பெற்றது. பாட்டு என்ற கட்டுரைகளோடு சேர்ந்ததன்று.