பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


63 இவ்வாறு தொண்டையைப் பயிற்சி செய்யாதோர் அங்கே பாடுவதாக வெளிப்பட மாட்டார்கள். "நம்மவர்கள், பாட்டுக் கச்சேரி வந்தால், சபைக்கு வந்த பிறகுதான் தம்பூர் சேர்ப்பதும் மிருதங்கத்தைத் தட்டித்தட்டி ஒத்திட்டுப் பார்ப்பதும் ஏதெல்லாமோ ஒரு மணி நேரத்து வேலை செய்கிருர்கள். இந்த நீண்ட ஹிம்ஸையை சபையோர் சும்மா பொறுத்துக் கொண்டிருக் கிருர்கள். ஐரோப்பாவிலே அப்படியில்லை. கருவிகளே யெல்லாம் சபைக்கு வருமுன்பாகவே நேர்படுத்தி வைத்துக் கொண்டு சபைக்கு வந்த உடனே பாட்டுத் தொடங்கு கிருர்கள். "நம்மவர்கள் வர்னமெட்டு சரியா என்பதையே பிரதானமாகப் பார்க்கிருர்கள். அங்குள்ளோர் குரலேயே முதலாக வைத்துக் கொண்டு ஆச்சரியமான வேலை செய் கிரு.ர்கள். இன்பங்களே நேரே வகுத்தால் ஒவ்வொருவனுக்கும் இன்பம் உண்டாகிறது. நேரே வகுத்தல் என்ருல் ஒன்றுபோல் வகுத்தல் என்று அர்த்தமில்லே. நியாயமாக வகுத்தல் என்று அர்த்தம். நியாயமே ஸ்மத்வத்தின் பெயர். நியாயமே முதலாவது ஸ்மத்வம். மேலேகூறிய ஜன வலிமை, ஸர்வஸுகம், என்ற இரண்டும் சேர்ந்தால் ஜனச் செம்மை ஏற்படுகிறது. ஜனச் செம்மை எப்படியிருக்கும்? மனிதன் செல்வவானுவான். குடிகள் விடுதலை பெற் றருப்பர். நாடு உயர்வு பெற்றிருக்கும்.