பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு ஸ்தாயிகள்தான் அகப்படுமென்று ஜகதீச சந்திர வள கணக்குச் சொல்லியதாக ஞாபகமிருக்கிறது. சைதந்யமாகி எல்லேயற்ற கடலில் நமக்குத் தென் படும் ஓரிரண்டு ஸ்தாயிகளிலுங்கூட நாம் ஆரோஹண அவரோஹன கிரமங்களிலும், ஸ்வரக் கோவைகளிலும் ராக வேற்றுமைகளிலும் எண்ணிறந்த விசித்திர விசித்திர மான அனுபவங்கள் பெறுதல் ளாத்யமேயாகும். அதுதான் இந்த ஜகத்தில் மஹத்தான ஆச்சர்யம். நம்முடைய வரையறுக்கப்பட்ட புலனுணர்வுக்குள்ளே அநந்தங்கள் பல இருக்கின்றன. ஸ்வரங்கள் ஏழுதானே? அப்படியிருந்தும் அவற்றின் கலப்புக்களால் இந்த பூமண்டலத்தின் மீது இதுவரை ஏற்பட்டனவும் இப்போது ஏற்பட்டுவருவனவும் இனி ஏற்படப் போவனவுமாகிய ராக பேதங்களே எண்ணில்லாதன. பதஞ்சலி யோக வைத்திரங்கள் 莎 、