பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கூட்டம் முடிவ பெற்றது' என்று வறிவித்து விட்டுப் போய் விட்டார். ஆனல் கூட்டம் கலையவில்லை. பாரதியார் எழுந்தார். கரகோஷங்ளுக்கு இடையே பாரதியார் பிரசங்கமாரி பொழிந்தார்’ 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்ற அற்புதப் பாடலேப் பாடினர். கூட்டம் பதிைெரு மணி வரையில் கலையாமல் இருந்ததற்கு வேறு காரணமும் வேண்டுமா? இவ்வாறு வ. ரா. அவர்கள் தமது மகாகவி பாரதியார் என்ற சுவையான நூலில் குறிப்பிடுகிருர். (இப்பாடலே ாாரதியார் புதுச் சேரியில் இருந்தபோதே இயற்றினர்.) வ. ரா. மேலும் தமது நூலில் கூறுகிருர்: தம்முடைய பாடல்களை, ஆண் பெண் அடங்கலும் தமிழ் நாட்டில் பாட வேண்டும் என்பது பாரதியாரின் ஆசை. ராகம் தாளம் எல்லாம் தெளிவாக இருக்க வேண்டும் என்று புரொபஸர் சுப்பிரமணிய அய்யரின் தம்பி சாமிநாத னுடைய உதவியைக் கொண்டு அவற்றை அழகாகச் சீர் படுத்தி விட்டார். பாரதியார் ஒரு பாடலே ஒரு ராகத்தில் பாடியிருப்பார். ஆனால் இந்த ராகத்தில் இன்ன தாளத் தில் அதைப் பாடினல், எழுச்சியுடன், எடுப்பாகவும் இருக்கும் என்று தம்பி சொன்னல், அதைத் தட்டவே மாட்டார். ஆப்தர்கள் நிபுணர்களாயிருந்தால், அவர் களுடைய யோசனையை பாரதியார் நிராகரிக்கவே மாட்டார்; அட்டியில்லாமல் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார். இவ்வாறு அவரோடு நெடுநாள் பழகியிருந்: rா. கூறுகிரு.ர். பாரதியார் ஒரு புதிய பாடலை இயற்றினுள் தி தை மற்றவர்களுக்கு அதன் உணர்ச்சியோடு பாடிக்காட்டுவார்.