பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டயம் குடும்பத்தார்தான் தம் கைப் பணத்தைச் செலவிட்டு இந்தியா' என்ற வார இதழை பாரதியார் நடத்து வதற்கு உதவிஞர்கள் பின்னுல் இப் பத்திரிகையைப் புதுச் சேரியிலிருந்து நடத்த நேர்ந்த போது மண்டயம் பூர். பூரீ நிவாசாசர்ரியார் தாமாகவே குடும்பத்தோடு புதுச்சேரி வாழ்க்கையை மேற்கொண் டார். இவருடைய தியாகத்தைத் தமிழர்கள் சரியாகப் புரிந்து போற்றவில்லை என்பது வருந்தத்தக்கது. இவருடைய மகள் யதுகிரி அம்மாள் திருமணத்தின் போது முதல் நாளில் பாது தியார் தமது தேசியப் பாடல் கச்சேரி ஒன்று நிகழ்த்தி ஒராம். பாரதியார் பாடல்களில் அநேகம் இசையோடு பாடு வதற்கு ஏற்றவை. இவர் இயற்றிய கண்ணன் பாட்டு பெரும்பாலும் இசையுடன் பிறந்தவை. இவற்றைப் பற்றி திரு. வ. வெ. சு. ஐயர் எழுதியுள்ள தாவது: " கவிதா ரீதியாகப் பார்க்கும் போது, இக் கீர்த்தனங்களுள் பெரும் பாலானவையிலுள்ள சுவை தேனினும் இனிதாயிருக் கிறது...... கடற்கரையில் சாந்தி மயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும் மோஹவயப் படுத்தி, நீலக் கடலையும் பாற் கடலாக்கும் நில வொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பளு கர்வத் தோடும், சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னு டைய கம்பிரமானகுர வில் பாடினதைக் கேட்ட ஒவ்வொரு வரும் இந்நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்.' பாரதியார் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளில் உள்ள பாடல்கள் சிலவற்றின் மெட்டைத்தழுவிச் சில அழகிய தேசியப்பாடல்கள் பாடியுள்ளார். தாயுமானவர் ஆநந்தக் க்ளிப்பு, நொண் டிச்சிந்து இவற்றையும் புதிய முறையில்