பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. மூன்று காதல் முதலாவது-சரஸ்வதி காதல் பிள்ளைப் பிராயத்திலே-அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு பள்ளிப் படிப்பினிலே-மதி பற்றிடவில்லை யெனிலுந் தனிப்பட வெள்ளை மலரணைமேல்-அவள் வீணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதம்-கண்டென் வெள்ளே மனது பறிகொடுத் தேன். அம்மா! 1 ஆடிவரு கையிலே-அவள் அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில் ஏடு தரித்திருப்பாள்-அதில் இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை நாடி யருகணைந்தால்-பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், இன்று கூடிமகிழ்வ மென்ருல்-விழிக் கோணத்தி லேநகை காட்டிச்செல் வாள், அம்மா! 2 ஆற்றங் கரைதனிலே-தனி யானதோர் மண்டப மீதினிலே, தென்றற் காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை ஏற்று மனமகிழ்ந்தே-அடி என்னே டிணங்கி மணம்புரி வாய்' என்று போற்றிய போதினிலே-இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள். அம்மா! 3