பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- . . . மா தெரியாத தமிழ் மக்களும் . ருக மாட் டார்கள். உருனுெல் அல்வவா இறைவகுேடு ஒட்டலாம். இரண்டும் ஒன்றுமாகக் கலக்கலாம். அப்படி ஒன்றி உறவாட நம்மால் முடியவில்லை யென்ருல் நாம் பாடிய எஸ்கிமோ பாட்டு விருதா பாட்டுதானே, நம் விண்ணப்பத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளும் படியாக நாம் சொல்லவில்லை என்றுதானே பொருள்? அப்படியானல் இறைவனுக்குக் காது கேட்கும்படியாக நாம் பாடவில்லை. இதைத்தான் ராஜாஜி சொன்னர்கள். - ஆகவே, பிற மொழிகளிலே பாடுவதால், பாரதியார் சொல்வது போல, நம்முடைய இசை ஞானம் மறைந்து போகும். அதன் விளைவாக ராஜாஜி சொல்வது போல, நமக்கே உரிய பக்தியும் மறைந்துபோகும். இதற்கெல்லாம் மேலாக பாகவதர்களுடைய பிழைப்பும் கெட்டுப் போகும். மெல்லிசையை வல்லிசை கபளிகரம் பண்ணிவிடும் என்பதைப் பாகவதர்கள் இப்போதாவது உணர்ந்தால், அவர்களுக்கும் நல்லது நம்முடைய இசை ஞானத்துக்கும் நல்லது, நமது பக்திக்கும் நல்லது. அதோடு சொற்களே இல்லாத சங்கீதத்தை மணிக்கணக் காகப் பாடுவது என்பதோ அனுபவிப்பது என்பதோ வெகு சிலருக்கே முடியும். ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள் சொன்னது போல, கடலை மாவுக்கும் சர்க்கரைக்கும் நமக்குவேற்றுமை தெரியத்தான் செய்யும், கடலைமாவையே தின்றுகொண்டு இருக்கவும் முடியாது, சர்க்கரையையேதின்று கொண்டு இருக்கவும் முடியாது; இரண்டையும் சேர்த் து லட்டு செய்துகொடுத்தால், நன்ருகவே சாப்பிடலாம். ஆகவே, தமிழிலுள்ள ஏராளமான, ஆனல் துருப்பிடித் துப்போன சாகித்யங்களை இசைவாணர்கள் துலக்கி, கச்சேரி களில் பாடி, தமிழ் மக்களை பதித்விக்க வேண்டும். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், ராம நாடகம், மாரி முத்தாப் பிள்ளை முத்துத்தாண்ட்வர், கோபாலகிருஷ்ண பாரதி, திருகூடராஜப்: கவிராயர் ஆகியோர் எழுதிய அற்புதமான இசைப் பாடல்கள் வேண்டுமட்டும் தமிழில்