பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. நந்த லாலா காக்கைச் சிறகினிலே நந்த லாலா!--நின்றன் கரிய நிறந் தோன்று தையே, நந்த லாலா! பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா ...நின்றன் பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா, கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்றன் கீத மிசைக்குதடா நந்த லாலா! திக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத் தீண்டு மின்பத் தோன்றுதடா, நந்த லாலா! 5. ஓம் சக்தி நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண், பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பொருந்தீ. வஞ்சன யின்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்த ரெல்லாம், தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி, ஒம், நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப் பாள்: அல்லது நீங்கும்” என்ற யுலகேளும் அறைந்திடுவாய் முரசே! சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு சொல்லு மவர் தமையே, அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும் ஓம் சக்தி, ஒம் சக்தி, ஒம்,