பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89 பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப் பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்: பண்ணுென்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப் பற்றி மறக்கு தில்லை பஞ்சையுள்ளமே. 7 13. கண்ணம்மா ட என் குழந்தை சின்னஞ் சிறுகிளியே-கண்ணம்மா செல்வக்களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே-உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! I பிள்ளைக் கணியமுதே,-கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே; அள்ளி யணைத்திடவே-என் முன்னே ஆடி வருந் தேனே, 2 ஒடி வருகையிலே-கண்ணம்மா! உள்ளங் குளிரு தடி! ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போப் ஆவிதழுவு தடி! 3 உச்சி தனை முகந்தால்-க்ருவம் ஒங்கி வளரு தடி மெச்சி புனேயூரார்-புகழ்ந்தால் மேனி சிவிர்க்குதடி! 4. கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் கள் வெறி கொள்ளு தடி! உன்னேத் தழுவிடிலோ-கண்னம்மா உன்மத்த மாகு தடி 5