பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


B. 3. 4. 5. 14. கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை ரசங்கள் : அற்புதம், சிருங்காரம் தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) தின்னப் பழங்கொண்டு தருவான்:- பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்: என்னப்பன் என்னையன் என்ருல்-அதனே எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) தேளுெத்த பண்டங்கள் கொண்டு-என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்: மாளுெத்த பெண்ணடி என்பான்-சற்று மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்.(தீராத) அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னே அழ அழச் செய்துயின் 'கண்ணே மூடிக்கொள் குழலிலே சூட்டுவேன்'-என்பான்-என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத) பின்னலைப் பின்னின் றிழுப்பான்:-தலை பின்னே திரும்புமுன்னேசென்று மறைவான்: வன்னப் புதுச்சேலே தனிலே-புழுதி வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத) புள்ளாங் குழல்கொண்டு வருவான்-அமுது பொங்கித் ததும்புதற் கீதம் படிப்பான்: கள்ளால் மயங்குவது போலே-அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.(தீராத)