பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& சண்தேத்துக்கும் இருந்த உறவு அறுந்து போய்விட்டது) என்று கதறிஞர். மேலும் சொன்னர்:-சங்கீதத் தேவதை அங்கு மிங்குமாகக் காட்டுத்தனமாக வெறி பிடித்து ஒடிக்கொண் டிருக்கிருள். எனக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை, எனக் கும் உண்மைக்கும் சம்பந்தம் இல்லை, என்று பீற்றிக்கொண்டு ஒடுகிருள், கற்பனையும் ஜன்னிக் கோளாறுமே எனக்கு உரியவை என்று புலம்பிக்கொண்டு இருக்கிருள். நான் இது தவறு என்று சொன்னல், அவள் என்னை நோக்கிப் பைத்தியச் சிரிப்புச் சிரிக்கிருள்' என்று சொன்னர். அதே நிைைமயைத்தான் தமிழ்நாட்டிலும் நாம் கண்டு கொண்டு இருக்கிருேம். ராஜா சர் அண்ணுமலை செட்டியார் அவர்களும், ரசிகமணி டி.கே.சி.யும், ராஜாஜியும், கல்கியும் தொடங்கிவைத்த தமிழிசை இயக்கம் ஒரளவு பைத்தியத்திலிருந்து நம்மைத் தெளிய வைத்திருக்கிறது. பாபநாசம் சிவன், கவியோகி சுத்தானந்த பாரதியார், தண்டபாணி தேசிகர், கீழ்வேளுர் மீனகதிசுந்தரம் பிள்ளை, இந்த நூலைத் தொகுத்த பெரிய சாமித்துரன் முதலியோர் புதிய சாகித்யங்களைத் தமிழில் உண்டுபண்ணி நல்ல சேவை செய்து வருகிரு.ர்கள். 'பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே பரத நாட்டியக் கூத்திடுவிரே' என்று பாரதியார் சொன்னபடி, புதிய புதிய சாகித்ய கர்த் தாக்கள் புதிய புதிய தமிழ் இசைப் பாடல்களை இயற்றி, காலத்தின் கோலத்துக்குத் தக்கவாறு நல்குவார்களேயானல், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழர்களை மகிழ்வித்து வந்த தமிழிசைக்குப் புத்துாட்டமும் புத்துயிரும் பேராதரவும் கிட்டும். இந்தப் புதிய முயற்சிக்குப் பாரதியும் பாட்டும் என்ற அரிய நூல் ஒரு கைகாட்டியாக அமையும். இந்த நூலைப் படித்து, தமிழ் மக்களும் இசைவாணர்களும் பயனடையவார்களாக. எஸ். மகராஜன்