பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியார் பிறகு எட்டயபுரத்திற்குத் திரும்பி வந்தார். ஆனால் அங்கே சமஸ்தானப் புலவராக இருக்க இவருக்குப் பிடிக்கவில்லை.

அதனால் மதுரைக்குச் சென்று இரண்டு மூன்று மாதம் தமிழாசிரியராக ஓர் உயர்நிலைப்பள்ளியில் வேலை செய்தார். அதையும் விட்டுவிட்டுப் பிறகு சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராக அமர்ந்தார்.

அப்படி இவர் சென்னைக்கு வந்தது தமிழுக்கு நல்ல காலம்; தமிழ் மக்களுக்கும் நல்ல காலம் என்று சொல்லலாம்.

சுதேசமித்திரனில் தமது விருப்பம் போல தேசபக்தியைத் தமிழ் மக்களுக்கு ஊட்ட முடியாது என்பதை பாரதியார் விரைவில் உணர்ந்தார்.

7

B,—2