பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை
கொண்டு
போகவோ? நாங்கள்-சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ ஆண்பிள்ளைகள்
அல்லமோ?-உயிர்-வெல்லமோ.

இப்படியெல்லாம் பாரதியார் வீரம் என்கின்ற உணர்ச்சி கொழுந்துவிட்டு எரியும்படியாகப் பல பாடல்களை எழுதினார்.

இந்திய மக்களில் பலபேர் அந்தக் காலத்தில் தேசத்தின் மீது பக்தி கொண்டிருப்பதாக நடித்தார்கள். உண்மையில் அவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை. அவர்களை எல்லாம் பழித்துப் பாட்டெழுதினார்.

நெஞ்சில் தைரியம் இல்லை; நேர்மையும் இல்லை. வஞ்சகமாகப் பேசுவார்கள்: வாய்ச் சொல்லில் அவர்கள் வீரர்கள். இப்படி பாரதியார் ஒரு பாடல் இயற்றி இருக்கிறார்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி-கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி!

கிளியைப் பார்த்துச் சொல்வதாக இந்தப்பாடலைப் பாரதியார் எழுதியிருக்கிறார்.

இந்திய மக்களிடையே அன்று ஜாதிச் சண்டை அதிகமாக இருந்தது. நான் ஹிந்து, நீ கிறிஸ்துவன் என்று இப்படி சமயத்தின் (மதத்தின்) பெயராலும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் மேலும் இந்தியர்களிடம் தைரியம் இருக்கவில்லை. அச்சமே அதிகமாக இருந்தது. ஒற்றுமையோடு எதையும் இந்தியர்கள் செய்யவில்லை.

10