பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணனுடைய விளையாட்டுக் குறும்புகளை யெல்லாம் அப்பாடலில் அவர் கூறுகின்றார். பழங்கொண்டு வந்து தின்பதற்காகக் கண்ணன் தருவானாம். தின்கின்றபோதே பழத்தைத் தட்டிப் பறிப்பானாம். என் கண்ணே, என் ஐயனே, என்று கெஞ்சினால் பழத்தை எச்சிற்படுத்திக் கொடுப்பானாம்!


தின்னப் பழங்கொண்டு தருவான் — பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என் ஐயன் என்றால்— அதனை
எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான்.

17