பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணன் அழகான மலர்களைக் கொண்டு வருவான். நீ கண்ணை மூடிக்கொள்; உன் தலையிலே வைக்கிறேன் என்பான். அதை உண்மை என்று நம்பிக் கண்ணை மூடிக் கொண்டால் தோழிக்கு மலர்களை வைத்து விடுவான்!

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழ அழச் செய்தபின், ‘கண்ணை மூடிக்கொள்
குழலிலே சூட்டுவேன்’ என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.

இப்படி ஒரு குறும்புதானா?

பின்னலைப் பின்னின்று இழுப்பான்— தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்.
வண்ணப் புதுச் சேலை தனிலே — புழுதி
வாரிச் சொரிந்து வருத்திக் குலைப்பான்.

ஒவ்வொரு சமயம் கண்ணன் புள்ளாங் குழலை எடுத்து வருவான். அதிலே அமுதம் போன்ற இனிய இசையை வாசிப்பான்.

புள்ளாங் குழல் கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்.

அந்த இசையைக் கேட்டு அப்படியே மயங்கிப் போய் வாயைத் திறந்து கொண்டு கேட்பார்களாம். அப் பொழுது அவன் செய்யும் வேடிக்கையைப் பார்க்க வேண்டுமே!

அங்காந் திருக்கும் வாய் தனிலே- கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்!

இப்படிக் கண்ணன் பாட்டு, முழுவதும் மிக அழகாக இருக்கும். பெரியவர்களாகும் போது, நீங்கள் அதைத்

18