பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேல் நாம் பழைய சிறப்பை எல்லாம் அடைய வேண்டும். புதிய பல சிறப்புக்களையும் பெற்று உலகத்திலே மறுபடியும் மற்ற நாட்டினர் எல்லாம் போற்றும்படியாக வாழவேண்டும்.

அதற்காகத் தொழில் வளம் ஓங்க வேண்டும்:

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே
யந்திரங்கள் வகுத்திடு வீரே

கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கி நல் முத் தெடுப்பீரே
 
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவி மேல்
ஆயிரம் தொழில் செய்திடு வீரே

என்று பாரதியார் பாடுகிறார்.

பாரதியாருடைய வாழ்க்கை வரலாற்றைச் சொல்ல வந்ததை நடுவில் அப்படியே விட்டு விட்டேன். இந்தப் பாடல்கள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் எழுதினேன். இனி இவருடைய வாழ்க்கையைத் தொடர்ந்து பார்ப்போம்.

பாரதியார் பாண்டிச்சேரியில் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்த போதிலும் நமது நாட்டை மறக்கவில்லை. அதற்கு வேண்டிய முன்னேற்றங்களைப் பற்றிப் பாடிக் கொண்டே இருந்தார்.

இவருக்குத் தங்கம்மா என்று ஒரு- குழந்தை இருந்த தென்று சொன்னேனல்லவா? அந்தக் குழந்தை காசியில் பாரதியாருடைய அத்தையின் வீட்டில் வளர்ந்துகொண்டிருந்தது என்றும் சொல்லியிருக்கிறேன்.

24