பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பாரதியாருக்கு உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டுவிட்டது. ஆனல் விரைவில் இவர் குணமடைந்தார். என்றாலும் முன்னமேயே மெலிந்திருந்த உடல் மேலும் மெலிந்து விட்டது.

அத்துடன் இவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் உண்டாயிற்று. அதனால் பாரதியார் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமரர் ஆனார்.

பாரதியாரைப் போன்ற சிறந்தவர்களை மரணமடைந்தார் என்று சொல்வது வழக்கமில்லை. அவர் அமரர் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும். அமரர் என்றால் மரணத்தைக் கடந்தவர் என்று பொருள். உண்மையில் பாரதியார் மரணமடைந்து மறைந்து போகவில்லை.

28