பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியார் சமூக சீர்திருத்தம் பற்றிப் பாடினார் பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று பாடினார் தமிழ்நாட்டை மிகவும் புகழ்ந்து பாடினார். தமிழ், மொழியை எங்கள் தமிழ்மொழி, எங்கள் தமிழ்மொழி என்று போற்றிப்பாடினார். ஆனால் அதே சமயத்தில் தமிழ்நாடு இந்திய நாட்டின் ஒரு பகுதி என்றும் பாடினார். பாரததேசம் ஒரே நாடு என்றும் பாடினார்.

பாரத சமுதாயம் வாழ்க என்று பாடினார். முப்பதுகோடி ஜனங்களுக்கும் பொது உடமை பாரத தேசம் என்று பாடினார்.

பாரத தேசத்தில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் இந்த நாட்டின் சிந்தனை ஒன்று என்று பாடினார்.

பாரதியார் பரந்த உள்ளம் படைத்தவர். இவருடைய கவிதைகள் மிகப் பெருமை வாய்ந்தவை. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் முக்கியமாகப் படித்துப் பயன்பெற வேண்டியவைகளை எல்லாம் இவர் எழுதி நமக்கு அளித்திருக்கிறார்.

பாரதியாரைப் போற்றுவோம். இவருடைய நூல்களைப் படித்துப் பயன்பெறுவோம்.

வாழ்க பாரதி நாமம்.