பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதனால் பாரதியார்,

ஓடிவிளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

என்ற பாப்பாப் பாட்டைத் தொடங்குகிறார்.

குழந்தைகள் ஒன்றோடொன்று சேர்ந்து விளையாடும். சில வேளைகளில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை வையத் தொடங்கும். அதனுடன் சண்டையும் போடும்.

பாரதியாருக்கு ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை வைதால் பிடிக்காது. அது நல்லதில்லை. குழந்தைப் பருவம் முதல்கொண்டு குழந்தைகள் சண்டையிட்டுக் கொள்ளாமல் கூடி விளையாடவும் மற்ற வேலைகளைச் செய்யவும் வேண்டும் என்பது பாரதியாரின் ஆசை. அதனால் ஓடிவிளையாடச் சொன்னவர் உடனே இதையும் சொல்லுகிறார்.

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

என்கிறார்.

குழந்தை சின்னஞ் சிறு
குருவியைப் போலே

குருவியைப் போலக் குழந்தை திரிந்து வரவேண்டுமாம். அழகான பறவைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டுமாம்.

கோழி இரைதேடிக் கொத்திக் கொத்தித் தின்று திரிகின்றது. காக்கை குழந்தை ஏமாந்த சமயம் பார்த்து