பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தித் திருடுகின்றது. இப்படிப்பட்ட பறவைகளுக் கெல்லாம் இரக்கங்காட்ட வேண்டும். பாரதியாரே காக்கை குருவிகளுக்கு சமையலுக்காக வைத்திருக்கும் அரிசியை எடுத்துப் போட்டு விடுவாராம். இவரைப் போலவே பறவைகளிடம் அன்பாகக் குழந்தைகள் இருக்க வேண்டும் என்கிறார்.

சின்னஞ் சிறு குருவி போலே-நீ
திரிந்து பறந்து வா பாப்பா

வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

கொத்தித் திரியும் அந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா

எத்தித் திருடுடிந்தக் காக்கை-அதற்கு
இரக்கப்பட வேணும் பாப்பா

33