பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பசு முதலிய விலங்குகளை ஆதரிக்க வேண்டும்

பசு நமக்குப் பால் தருகின்றது. நாய் அன்போடு வாலைக் குழைக்கிறது; வீட்டைக் காவல் புரிகின்றது. குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாகச் செல்கின்றது. மாடு வயலில் உழுது நமக்கு உணவு தானியங்களைப் பயிர் செய்ய உதவுகின்றது. ஆட்டுக் குட்டி துள்ளிக் குதிக்கும் போது எவ்வளவு இன்பமாக இருக்கின்றது!; அது நம்மை அண்டிப் பிழைக்கும் சாதுவான பிராணி. காந்தி அடிகள் ஆட்டின் பாலைத்தான் விரும்பிக் குடித்தார்.

இவ்வகையான விலங்குகளை எல்லாம் நாம் நன்றாகக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் பாரதியார்.

பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்த
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தது முதல் மாலைவரை செய்ய வேண்டியவை

காலை எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் பாரதியார் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு முதலில் படிக்க வேண்டுமாம். காலையில்தான் நமது மூளை மிக நன்றாக வேலை

34