பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எந்தக் காலத்திலோ ஏற்பட்ட சாதிப் பிரிவினை இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. இந்தியர்கள் அனைவரும் ஒரே சாதி. ஒரே குலம். இதைத்தான் குழந்தைப் பருவம் முதல் கற்றுக் கொள்ள வேண்டும். பிறப்பினால் சாதி வேற்றுமை இருக்கக் கூடாது என்கிறார் பாரதியார்.

உலகத்தில் சாதியென்றால் அவை இரண்டேதான் என்று இருக்க வேண்டும். ஔவைப்பாட்டி இதைத்தான் சொன்னார்.

சாதி இரண்டொழிய வேறிலை என்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்

என்று பாரதியார் வேறொரு பாட்டில் பாடி இருக்கிறார்.

நீதி, உயர்ந்த அறிவு, கல்வி, அன்பு இவற்றை நிறையக் கொண்டிருப்பவர்கள் மேலோர். இவர்கள் உயர்ந்தவர்கள். இவை இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள். இந்த இரண்டே பிரிவுகள் வேண்டுமானால் இருக்கலாம் என்கிறார் பாரதியார். பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று யாரையும் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்வது பாவம் என்று நாம் கருதவேண்டும்.

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு இருக்க வேண்டும். அத்துடன் கடவுள் உண்டு என்றும் நம்பவேண்டும். அறிவே தெய்வம் என்கிறார் பாரதியார். அன்பே தெய்வம் என்றும் சொல்லுகிறார்.

ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அது அறிவு மயமானது. அது அன்பு மயமானது. அது உலகத்தை நடத்துகின்றது. அதைத்தான் வெவ்வேறு பெயரிட்டு நாம் அழைக்கின்றோம். ஆனால் அந்த தெய்வம் ஒன்றே-

41