பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாப்பாப் பாட்டு ஒரு அருமையான பாட்டு. இதை நீங்கள் நன்றாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் காலத்தில் பாரதியாரை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டைத் தட்டி எழுப்பிய பாரதியாருக்கு நாமும் நன்றி செலுத்த வேண்டாமா?

முதலில் பாப்பாப் பாட்டைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன்படி நடக்கப் பழகுங்கள். அதுவே பாரதியாருக்கு நாம் செலுத்தும் சிறந்த நன்றியாகும்.

பாப்பாப் பாட்டைச் சிறுசிறு பகுதிகளாக இதுவரை பார்த்தோம். அதை முழுவதும் மனப்பாடம் செய்ய எளிதாக இருக்கும்படி ஒன்றாகச் சேர்த்து இங்கு கொடுக்கிறேன்.

பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.... 1

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு--நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!.. 2

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு, பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்கை-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா !...... 3

43