பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதியும் பாப்பாவும்

கும்பகர்ணன் கதை உங்களுக்கெல்லாம் தெரியுமோ இல்லையோ?

கும்பகர்ணன் ஆறுமாதம் சேர்ந்தாற்போல் தூங்குவானாம். யாருமே அவனை எழுப்ப முடியாதாம், என்ன செய்தாலும் சரி அவன் காதுக்குள்ளே இடி இடித்தாலும் சரி அவன் தூக்கம் கலையாதாம்!

இந்தக் கும்பகர்ணனைப் போலத்தான் நம்ம தமிழ்நாடு தூங்கிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டு மக்கள் சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னே இப்படித்தான் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

தூங்கினார்கள் என்றால் உண்மையாகவே தூங்கவில்லை. இரவிலே தூங்குவதும், பகலிலே விழிப்பதுமாகத் தானிருந்தார்கள்.

ஆனால் அந்தக் காலத்திலே மக்கள் அந்நிய நாட்டாருக்கு அடிமைகளாக இருந்தார்கள். நமது இந்தியாவில் வெளிநாட்டாரின் அரசாட்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர் இந்தியாவை அடிமையாக வைத்திருந்தார்கள். இன்று நமக்கு சுதந்திரம் இருப்பதுபோல அன்று வாழ்ந்த இந்திய மக்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை.

நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் நமது சட்டசபைகளில் விருப்பமான சட்டங்களை இப்பொழுது

1